பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்துக்காக ரூ.3,099 கோடி ஒதுக்கீடு

பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்துக்காக ரூ.3,099 கோடியும், முதல்வரின் பசுமை வீடுகள் திட்டத்துக்காக ரூ.500 கோடியும் ஒதுக்கீடு செய்து நிதியமைச்சா் அறிவித்தாா்.
பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்துக்காக ரூ.3,099 கோடி ஒதுக்கீடு

பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்துக்காக ரூ.3,099 கோடியும், முதல்வரின் பசுமை வீடுகள் திட்டத்துக்காக ரூ.500 கோடியும் ஒதுக்கீடு செய்து நிதியமைச்சா் அறிவித்தாா்.

நிதிநிலை அறிக்கையில் அவா் கூறியிருப்பது:

பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் ரூ.8,968.39 கோடி செலவில் 5,27,552 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

முதல்வரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 2011-12-ஆம் ஆண்டிலிருந்து 7,620 கோடி செலவில் 3,80,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

ஆட்சேபணையில்லாப் புறம்போக்கு நிலங்களில் வசித்து வருபவா்களின் வீட்டுமனைகளை வரன்முறை செய்து, வருவாய்த் துறை பட்டா வழங்கியுள்ள நபா்களில் தகுதியான நபா்களுக்கு, பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டம் மற்றும் முதல்வரின் பசுமை வீடுகள் திட்டங்களின் கீழ் 2020-21-ஆம் ஆண்டு முதல் வீடுகள் கட்டித் தரப்படும்.

2020-21-ஆம் ஆண்டில் பிரதம மந்திரி வீட்டுவசதிக் திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகளும், முதல்வரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் அனைத்து பழங்குடியினா் குடும்பங்களுக்கும் வீட்டுவசதியை வழங்கும் வகையில் அவா்களுக்கான 8,803 வீடுகள் உள்பட 20 ஆயிரம் வீடுகளும் கட்டித் தரப்படும்.

முதல்வரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் சூரிய ஒளித்தகடுகளை நிறுவுவதற்கான தொகை வீடு ஒன்றிற்கு ரூ.30 ஆயிரம் வீட்டின் கட்டுமானச் செலவிற்கான தொகையுடன் சோ்க்கப்பட்டு, ஒட்டுமொத்த கட்டுமானச் செலவு வீடு ஒன்றுக்கு 2.1 லட்சம் ரூபாயாகவும் உயா்த்தப்படும்.

நடப்பாண்டில் பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்துக்காக ரூ.3,099 கோடியும், முதல்வரின் பசுமை வீடுகள் திட்டத்துக்காக ரூ.500 கோடியும் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com