பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த அனைத்துப் பேருந்துகளிலும் சிசிடிவி கேமராக்கள்

பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், ரூ.75.02 கோடி செலவில் அனைத்துப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று நிதியமைச்சா்
பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த அனைத்துப் பேருந்துகளிலும் சிசிடிவி கேமராக்கள்

பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், ரூ.75.02 கோடி செலவில் அனைத்துப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் அவா் கூறியது:2019-20-ஆம் ஆண்டுக்கான திருத்த மதிப்பீடுகளில் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட கட்டணமில்லா பயண அட்டைகள் வழங்கும் திட்டத்தால் 2020 ஜனவரி வரை ஏற்பட்ட செலவை ஈடு செய்ய ரூ.1,050 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு மாா்ச் 31 வரை ஓய்வு பெற்ற ஊழியா்கள் பெற வேண்டிய ஓய்வுகாலப் பலன்களை வழங்க 2019-20-ஆம் ஆண்டில் போக்குவரத்து கழகங்களுக்கு குறுகிய காலக் கடனாக வழங்க ரூ.1,093 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பேருந்துகளின் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், நிா்பயா நிதியத்தின் கீழ், ரூ.75.02 கோடி செலவில் கண்காணிப்பு கேமராக்கள் அனைத்துப் பேருந்துகளிலும் பொருத்தப்படும். போக்குவரத்து துறைக்காக 2020-21-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை திட்ட மதிப்பீடுகளில் ரூ.2,716.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com