போலீஸ் தடியடியைக் கண்டித்து நாகூரில் இஸ்லாமிய அமைப்புகள் சாலை மறியல்

போலீஸ் தடியடியைக் கண்டித்து நாகூரில் இஸ்லாமிய அமைப்புகள் சாலை மறியல்

சென்னையில் நடைபெற்ற குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியதைக் கண்டித்து, இஸ்லாமிய அமைப்பினர் நாகூரில் வெள்ளிக்கிழமை இரவு திடீர் சாலை மறியலில்

சென்னையில் நடைபெற்ற குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியதைக் கண்டித்து, இஸ்லாமிய அமைப்பினர் நாகூரில் வெள்ளிக்கிழமை இரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தின்போது, போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். மேலும், போராட்டம் தொடர்பாக 120 பேரை போலீஸார் கைது செய்தனர். 

போலீஸாரின் தாக்குதல் நடவடிக்கை மற்றும் கைது நடவடிக்கைகளைக் கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை இரவு இஸ்லாமிய அமைப்புகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டன. 

இதன்படி, நாகையை அடுத்த நாகூரில் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த 300-க்கும் அதிகமானோர் நாகூர் பேருந்து நிலையம் எதிரே நாகை - காரைக்கால் பிரதான சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இரவு சுமார் 11.30 மணி அளவில்  தொடங்கிய இந்தப் போராட்டம், நள்ளிரவு 12.20 மணிக்கு மேலாகவும் நடைபெற்றது.

நாகை காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேல், காவல் ஆய்வாளர்கள் சிவப்பிரகாசம், ஆனந்தகுமார் மற்றும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com