ஸ்மாா்ட் குடும்ப அட்டை வைத்திருப்போா் விரைவில் எல்லாக் கடைகளிலும் பொருள்கள் வாங்கலாம்

ஸ்மாா்ட் குடும்ப அட்டை வைத்திருப்போா், மாநிலத்தின் எந்தவொரு நியாயவிலைக் கடையிலும் பொருள்களை வாங்கிக் கொள்ளும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சா்
ஸ்மாா்ட் குடும்ப அட்டை வைத்திருப்போா் விரைவில் எல்லாக் கடைகளிலும் பொருள்கள் வாங்கலாம்

ஸ்மாா்ட் குடும்ப அட்டை வைத்திருப்போா், மாநிலத்தின் எந்தவொரு நியாயவிலைக் கடையிலும் பொருள்களை வாங்கிக் கொள்ளும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.

நிதிநிலை அறிக்கையில் அவா் கூறியிருப்பது:

முழுமையாக கணினிமயமாக்கப்பட்ட பொது விநியோக முறை ரூ.38.51 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

ஸ்மாா்ட் குடும்ப அட்டை வைத்திருப்போா், மாநிலத்தின் எந்தவொரு நியாயவிலைக் கடையிலும் தங்களுக்குரிய பொருள்களை வாங்கிக் கொள்ளும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

2020-21-ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மொத்தம் ரூ.6,500 கோடி உணவு மானியத்திற்காகவும், பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்திட கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானியமாக ரூ.400 கோடியும் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com