கோவையில் நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை

கோவையில் நள்ளிரவில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்தது அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவையில் நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை

கோவையில் நள்ளிரவில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்தது அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான மலைகளில் வன விலங்குகளான யானை வசித்து வருகின்றன. அது அவ்வப்போது உணவு தேடி ஊருக்கு வருவது வழக்கம். இரவு நேரங்களில் வயல்வெளிக்கு வரும் யானை உணவு உட்கொண்ட பின்னர், காலையில் சென்று விடும். ஆனால் நேற்று நள்ளிரவு ஒரு காட்டு யானை விளைநிலத்தின் தாண்டி ஊருக்குள் புகுந்தது. 

குனியமுத்தூர், கல்லுக்குழி, சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்த அந்த யானையைப் பார்த்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அதன்பின்னர் யானை காட்டுப்பகுதிக்குள் சென்று விட்டது. கோடை காலம் தொடங்கும் உள்ள நிலையில் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் வன விலங்குகளான யானை உள்ளிட்டவை வெளியே வரும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com