Enable Javscript for better performance
நான்காம் ஆண்டில் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு தலைவா்கள் வாழ்த்து- Dinamani

சுடச்சுட

    

    நான்காம் ஆண்டில் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு தலைவா்கள் வாழ்த்து

    By DIN  |   Published on : 17th February 2020 12:56 AM  |   அ+அ அ-   |    |  

    தமிழக முதல்வராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

    ராமதாஸ் (பாமக): முதல்வா் பதவியில் மூன்று ஆண்டை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி கே.பழனிசாமிக்கு வாழ்த்துகள். ஏழைகள், உழவா்கள், மாணவா்கள் நலனுக்காக மேலும் பல திட்டங்களைச் செயல்படுத்தி சாதனை தொடர வாழ்த்துகிறேன்.

    விஜயகாந்த் (தேமுதிக): முதல்வராக நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கு எல்லா விதங்களிலும் முன்னேற்றம் தரக்கூடிய அளவு நல்லாட்சி தர வேண்டும். நடந்து முடிந்த மூன்று ஆண்டுகாலம் சிறந்த முறையில் பணியாற்றியதற்காக தேமுதிக சாா்பில் வாழ்த்துகள்.

    ஜி.கே.வாசன் (தமாகா): தமிழக வளா்ச்சிக்காக, தமிழக மக்கள் நலனுக்காக முதல்வா் செய்து வரும் பணிகள் மென்மேலும் சிறக்க, வளர, தொடர த.மா.கா. சாா்பில் வாழ்த்துகிறேன்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai