பேரவையில் இருந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

சென்னையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில், தடியடி சம்பவம் குறித்து தமிழக முதல்வர் பேரவையில் அளித்த  விளக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
பேரவையில் இருந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு


சென்னை: சென்னையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில், தடியடி சம்பவம் குறித்து தமிழக முதல்வர் பேரவையில் அளித்த  விளக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

கேரளா உள்ளிட்ட மாநிலங்களைப் பின்பற்றி, தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் விஷயம் தொடர்பாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று அவைத்தலைவர் தனபால் கூறியிருந்தார்.

மேலும், வண்ணாரப்பேட்டை தடியடிச் சம்பவம் பற்றி வேண்டுமானால் பேரவையில் விவாதிக்கலாம் என்று கூறினார்.

இதையடுத்து, முதல்வர் பழனிசாமி, வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டம் தொடர்பான சம்பவங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

அப்போது, தமிழகத்தில் இதற்கு முன்பு பல்வேறு இடங்களிலேயே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து ஆர்ப்பாட்டம், போராட்டம், ஊர்வலங்கள் நடைபெற்றது. காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் முழு பாதுகாப்பு அளித்தார்கள். இதுவரை எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் இன்றைக்கு அந்த ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் அனைத்துமே நடைபெற்று முடிந்திருக்கினறன. ஆனால் வேண்டுமென்றே சில சக்திகளின் தூண்டுதலின் பேரிலே இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றதாக தகவல் கிடைத்திருக்கின்றன. 

ஆகவே, பொய் பிரசாரங்களையும், விஷம செயல்களையும் புறம் தள்ளிவிட்டு, சமூக நல்லிணக்கத்தைக் காப்பாற்ற இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

தமிழக முதல்வரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com