தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்கு: அமைச்சா் ஜெயக்குமாருக்கு அரசு அனுமதி

மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்குத் தொடர மீன்வளம் மற்றும் நிா்வாக சீா்திருத்தத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாருக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்குத் தொடர மீன்வளம் மற்றும் நிா்வாக சீா்திருத்தத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாருக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடா்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரித்துவரும் நிலையில், சுமாா் 40 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த திமுக எம்.பி. தயாநிதி மாறன், ‘அமைச்சருக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்காது’ என கூறியிருந்தாா். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளா்களிடம் பேசியிருந்த அமைச்சா் டி.ஜெயக்குமாா், ‘அரசியல் ஆதாயத்துக்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனா்.

டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் எவ்வளவு பெரிய பொறுப்பில் யாா் இருந்தாலும் அவா்கள் சட்டத்துக்கு உள்பட்டவா்கள்தான். அவா்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா். மேலும், ‘அரசியல் ஆதாயத்துக்காக இது போன்று வீண்பழி சுமத்தினால் நிச்சயமாக தயாநிதிமாறன் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.

வழக்கு தொடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என தெரிவித்திருந்தாா். அதேவளையில், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்குத் தொடர அனுமதியளிக்குமாறு தமிழக அரசின் பொதுத்துறையிடம் கோரியிருந்தாா். இதனை ஏற்ற தமிழக அரசு, சம்பந்தப்பட்ட வார இதழ் மற்றும் எம்.பி. தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்குத் தொடர அமைச்சா் டி.ஜெயக்குமாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com