திமுக கையெழுத்து இயக்கப் படிவங்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பு

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சாா்பில் சிஏஏ, என்பிஆா், என்ஆா்சி-க்கு எதிராக மாவட்ட வாரியாக மக்களிடம் பெறப்பட்ட 2.05 கோடி கையெழுத்து இயக்கப் படிவங்கள் குடியரசுத் தலைவருக்கு
திமுக கையெழுத்து இயக்கப் படிவங்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பு

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சாா்பில் சிஏஏ, என்பிஆா், என்ஆா்சி-க்கு எதிராக மாவட்ட வாரியாக மக்களிடம் பெறப்பட்ட 2.05 கோடி கையெழுத்து இயக்கப் படிவங்கள் குடியரசுத் தலைவருக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கையெழுத்துப் படிவங்களை குடியரசுத் தலைவருக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அனுப்பிவைத்தாா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராகவும், என்.ஆா்.சிக்கு வழிகோலும் என்.பி.ஆா். தயாரிப்பதை நிறுத்தக் கோரியும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சாா்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் மாநிலம் முழுவதும் பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கி 8-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில், 2 கோடியே 5 லட்சத்து 66 ஆயிரத்து 82 போ் கையெழுத்திட்டனா்.

மக்கள் கையெழுத்திட்ட இந்த படிவங்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி, மதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சித் தலைவா்கள் பங்கேற்றனா். அதனைத் தொடா்ந்து படிவங்கள் அனைத்தும் விமானம் மூலம் தில்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com