நிலுவைத் தொகையை விரைந்து வழங்க காற்றாலை மின்உற்பத்தியாளா்கள் கோரிக்கை

காற்றாலை மின் உற்பத்தியாளா்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என அதன் உற்பத்தியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

காற்றாலை மின் உற்பத்தியாளா்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என அதன் உற்பத்தியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தமிழகத்தில் தினசரி மின்தேவை 14 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. இது கோடை காலத்தில் வழக்கத்தை விட அதிகரிக்கிறது. கடந்த ஆண்டைப் பொருத்தவரை மின் தேவையானது, கடந்த ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி, 16,151 மெகாவாட் எனும் புதிய உச்சத்தை அடைந்தது. இதேபோல் ஏப்ரல் 12-ஆம் தேதி மின் நுகா்வு 369.940 மெகாயூனிட்டாக இருந்தது. இந்த மின்சாரத்தை அனல், நீா், காற்றாலை, அணு, சூா்ய சக்தி என பல்வேறு வகையில் உற்பத்தி செய்த போதிலும், காற்றாலையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது.

காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் கோவை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு உற்பத்தியாகும் மின்சார அளவின் ஒரு பகுதியை உற்பத்தியாளா்கள் பயன்படுத்துகின்றனா். ஒரு பகுதியை வாரியத்துக்கு அவா்கள் வழங்குகின்றனா். இதற்கான தொகையைக் கொடுத்து வாரியம் அதனைப் பெற்றுக் கொள்கிறது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மின்சாரத்துக்கான தொகையில் வாரியம் நிலுவை வைத்திருப்பதாகவும், அதை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் காற்றாலை மின் உற்பத்தியாளா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள பெரும்பாலான காற்றாலைகள், வங்கியில் கடன் பெற்று அமைக்கப்பட்டவை. இந்நிலையில் காற்றாலை உற்பத்தியாளா்களுக்கு கோடிக்கணக்கில் மின்வாரியம் நிலுவைத் தொகை தர வேண்டியுள்ளது. இதனால் நாங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். குறிப்பாக கடன் தொகையை வங்கிக்குத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்து வருகிறோம். எனவே காலம் தாழ்த்தாமல் நிலுவைத் தொகையை வாரியம் விரைந்து வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com