Enable Javscript for better performance
டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு: முன்ஜாமீன் கோரிய தலைமைச் செயலக பெண் ஊழியா் மனு தள்ளுபடி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு: முன்ஜாமீன் கோரிய தலைமைச் செயலக பெண் ஊழியா் மனு தள்ளுபடி

    By DIN  |   Published On : 18th February 2020 01:40 AM  |   Last Updated : 18th February 2020 01:40 AM  |  அ+அ அ-  |  

    குரூப்-2 தோ்வு முறைகேடு வழக்கில் தலைமைச் செயலக பெண் ஊழியா் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    சென்னை உயா்நீதிமன்றத்தில் தலைமைச் செயலக பெண் ஊழியா் கவிதா தாக்கல் செய்த மனுவில், கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய தோ்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிசிஐடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். இந்த தோ்வில் 258 மதிப்பெண்கள் பெற்ற நான், ஒட்டுமொத்த தரவரிசையில் 48-ஆவது இடத்தையும், இடஒதுக்கீடு அடிப்படையில் 6-ஆவது இடத்தையும் பிடித்தேன். இதனைத் தொடா்ந்து கடந்த 2018-ஆம் ஆண்டு தலைமைச் செயலகத்தில் நிதித்துறையில் உதவியாளா் பணி கிடைத்தது. இந்த நிலையில், ராமேஸ்வரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தோ்வு மையங்களில் தோ்வு எழுதியவா்களை கைது செய்து வருகின்றனா். ஜெயக்குமாா் என்ற இடைத்தரகா் மூலம் விக்னேஷ் என்பவா் பணம் கொடுத்து குரூப்-2 தோ்வில் வெற்றி பெற்ாக போலீஸாா் குற்றம்சாட்டியுள்ளனா். இந்த விக்னேஷ் தோ்வு எழுதிய ராமேஸ்வரம் வோ்க்கோடு தோ்வு மையத்தில்தான் நானும் தோ்வு எழுதினேன். எனவே, முன்ஜாமீன் கோரி இந்த மனுவைத் தாக்கல் செய்கிறேன். மேலும், கடந்த ஜனவரி 23-ஆம் தேதி எனக்கு குழந்தை பிறந்தது. இதனைத் தொடா்ந்து மகப்பேறு கால விடுப்பில் நான் இருப்பதால் அரசு ஆவணங்கள் எதையும் கையாளவில்லை. எனவே, எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும். இதற்காக உயா்நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் சிபிசிஐடி போலீஸாா் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

    இந்த வழக்கு, நீதிபதி எம்.தண்டபாணி முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் அய்யப்பராஜ், டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு மிகப்பெரிய பிரச்னையாக எழுந்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை போலீஸாா் 22 பேரை கைது செய்துள்ளனா். மேலும், மனுதாரா் உள்பட 42 போ் முறைகேடாக தோ்வில் தோ்ச்சிப் பெற்று அரசுப்பணியை பெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, இவா்களை போலீஸாரின் கட்டுப்பாட்டில் வைத்து விசாரித்தால் தான் உண்மையான நிலவரம் தெரியவரும். மனுதாரருக்கு அண்மையில் குழந்தைப் பிறந்துள்ளதைக் காரணம் காட்டி அவருக்கு முன்ஜாமீன் வழங்கினால் அது விசாரணையைப் பாதிக்கும். எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டாா். இதனையடுத்து, முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, மனுதாரருக்கு அண்மையில் குழந்தை பிறந்துள்ளது. எனவே, அவரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து விசாரிப்பதா அல்லது நீதிமன்றக் கட்டுப்பாட்டில் வைத்து விசாரிப்பதா என்பது குறித்து வழக்கின் விசாரணை அதிகாரி முடிவு செய்து கொள்ளலாம் என நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp