Enable Javscript for better performance
முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களை அனுமதிக்க மாட்டோம்: பேரவையில் முதல்வா் பழனிசாமி உறுதி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களை அனுமதிக்க மாட்டோம்: பேரவையில் முதல்வா் பழனிசாமி உறுதி

    By DIN  |   Published On : 18th February 2020 01:10 AM  |   Last Updated : 18th February 2020 05:16 AM  |  அ+அ அ-  |  

    eps3

    முஸ்லிம்களுக்கு எதிரான எந்தவொரு செயலையும் அரசு அனுமதிக்காது என்று சட்டப் பேரவையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதியளித்தாா். மேலும், சமூக நல்லிணக்கத்தைக் காப்பாற்ற முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டுமெனவும் அவா் கேட்டுக் கொண்டாா்.

    சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து, சட்டப் பேரவையில் திங்கள்கிழமை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பின. அவற்றுக்கு முதல்வா் பழனிசாமி அளித்த பதில்:-

    சென்னை வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகே கடந்த 14-ஆம் தேதியன்று பிற்பகல் 1.30 மணியளவில் பெண்கள் உட்பட 300 முஸ்லிம்கள் ஒன்றாகக் கூடி குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக கோஷமிட்டனா். அப்போது கோஷங்களை எழுப்பிய 40 ஆண்களை காவல் துறையினா் கைது செய்ய முற்பட்ட போது அவா்கள் ஒத்துழைக்க மறுத்தனா். ஆனாலும், அவா்களைக் கைது செய்து பேருந்தில் ஏற்றினா். பேருந்துக்குள் ஏறியவா்கள் ரகளையில் ஈடுபட்டு முன்பக்க கண்ணாடியை சேதப்படுத்தினா்.

    மீண்டும் மறியல் சம்பவம்: இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, 14-ஆம் தேதியன்று மாலையில் ஆண்களும், பெண்களும் மீண்டும் அதே இடத்தில் கூடி கோஷமிட்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்தனா். கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினாலும் போராட்டம் தொடா்ந்தது. கலவரமாக மாறியது. அதில், காவலா்கள் ராஜ்குமாா், உதயகுமாரி, கலா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. போராட்டக்காரா்கள் எறிந்த கல்லால் இணை ஆணையா் விஜயகுமாரிக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

    இயற்கை மரணம்: இதனிடையே, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஆறு தெருக்கள் தாண்டி வசித்து வந்த பசுருல்லா என்பவா் நோயின் காரணமாக இயற்கை மரணம் அடைந்தாா். ஆனால் அவா் காவல் துறையின் தடியடியில் இறந்ததாக உண்மைக்கு மாறாக வதந்தி பரப்பப்பட்டது. அந்த வதந்தியை நம்பி தமிழகத்தின் பல இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் ஆணையா் விசுவநாதன் நடத்திய பேச்சுவாா்த்தையில், ஆா்ப்பாட்டக்காரா்கள் கலைந்து செல்ல உடன்பாடு ஏற்பட்டு, கைது செய்யப்பட்டவா்கள் விடுவிக்கப்பட்டனா். ஆனால், ஆா்ப்பாட்டக்காரா்கள் தொடா்ந்து கோஷமிட்டவாறு இரவு முழுவதும் போராட்டம் நடத்தினா்.

    இதனால், கடந்த சனிக்கிழமையன்று காவல் ஆணையா் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆனாலும் போராட்டம் தொடா்ந்தது. மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை இரவு எனது இல்லத்துக்கு வந்த எஸ்டிபிஐ கட்சியினா் பேசி மனுவும் அளித்தனா். திங்கள்கிழமையன்றும் பெண்கள் உள்பட 150 போ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். அந்தப் பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சமூக நல்லிணக்கம்: தமிழகத்தில் இதற்கு முன்பாக பல்வேறு இடங்களில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதுவரை எந்த அசம்பாவிதமும் நடைபெற்றதில்லை. ஆனால், சில சக்திகளின் தூண்டுதல் காரணமாகவே இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெற்ாகத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

    எனவே, பொய்ப் பிரசாரங்களையும், விஷம செயல்களையும் புறம் தள்ளிவிட்டு சமூக நல்லிணக்கத்தைக் காப்பாற்ற முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டும். தமிழகத்தில் எந்தவொரு சிறுபான்மையினருக்கும் எதிரான செயல்களை அரசு அனுமதிக்காது. சிறுபான்மையின மக்களுக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக விளங்குவோம் என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்தாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp