கோவை மாநகராட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக எம்எல்ஏ உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கைது

அடிப்படை வசதிகள் செய்து தராத கோவை மாநகராட்சியை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய  திமுக எம்எல்ஏ உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் திமுகவினர் போராட்டம்
கோவையில் திமுகவினர் போராட்டம்

கோவை: அடிப்படை வசதிகள் செய்து தராத கோவை மாநகராட்சியை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய  திமுக எம்எல்ஏ உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 74 வட்டம் கலைஞர் நகரில் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் அருகே பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளை பூர்த்தி செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையிலும், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முமச.முருகன்,  பகுதி கழக செயலாளர் எஸ்எம்.சாமி, வட்டக்கழக செயலாளர் மேகநாதன் ஆகியோர் முன்னிலையில்  இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், 74வது வட்டத்திற்கு உட்பட்ட ஜிஎம்.நகர், வைரம் நகர், கோட்டைபுதூர், என்.எஸ்.கார்டன், காந்திநகர், கணபதி காலனி, இந்திரா நகர் , கேபி.நகர், குளத்துவாய்க்கால், மஜித் காலனி, பாரி நகர், முனுசாமி நகர், பாரி நகர், ஆர்ஜி.நகர், ரூபா நகர், சண்முகா நகர், சிவராம் நகர், ஸ்ரீ நகர், பாரதி நகர், ஞானசுந்தரி நகர், காமராஜ் நகர், காமாட்சியம்மன் கோவில் வீதி, கருணாநிதி வீதி, கருப்பண்ணா லே அவுட், காவேரி நகர், நடராஜன் நகர், நடராஜன் காலனி, ஆறுமுக நகர், வீரப்பதேவர் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடாமல் குண்டும் குழியுமாக இருப்பதை கண்டித்தும், சாக்கடைகள் தூர்வாராமல் சுகாதார சீர்கேடுடன் இருப்பதை கண்டித்தும், குப்பைகள் அகற்றப்படாததை கண்டித்தும், மாநகராட்சி குடிநீர் வினியோக உரிமையை தனியார் நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட 100 சதவீத வரி உயர்வை, நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும், மாநகராட்சியின் வரலாறு காணாத ஊழல் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும், எஸ்பி. வேலுமணியின. மாநகராட்சி டெண்டரில்  சகோதரரின் தலையீட்டை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நா.கார்த்திக் எம்எல்ஏ பேட்டியின்போது கூறுகையில்;- கோவை மாநகராட்சி முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளதாகவும், குப்பைகள், சாக்கடை கழிவுகள் அகற்றப்படாததால் சுகாதார சீர்கேட்டின் பிறப்பிடமாக கோவை உள்ளது, நோய்கள் பரவ கூடிய  அவல நிலை உள்ளது எனவும், மாநகராட்சியின் பணிகளில் சமூக ஆர்வலர் என்ற பெயரில் எஸ்பி.அன்பரசு வின் தலையீடு உள்ளது இதை வன்மையாக கண்டிப்பதாகவும், மாநகராட்சியின் இந்த போக்குகளை கண்டித்து 11-3-20 அன்று கோவை டவுன்ஹாலில் உள்ள  மாநகராட்சியின் மெயின் அலுவலகத்தை மாநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் முற்றுகையிட உள்ளதாக தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் நாச்சிமுத்து, நந்தக்குமார், மெட்டல் மணி, இரா.கா.குமரேசன், குப்புசாமி, உமா மகேஷ்வரி, பகுதி கழக செயலாளர் விபி.செல்வராஜ்,  பொறுப்பாளர் சண்முகசுந்தரம், குனிசை லோகு, பகுதி கழக துணை செயலாளர் நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர் தீபா, ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com