சீனக் கப்பலில் பூனை: விளக்கமளிக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சீனாவிலிருந்து சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ள கப்பலில் பூனை இருப்பதாக வெளியான தகவல் குறித்து துறைமுக அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

கொவைட்-19 (கரோனா வைரஸ்) பாதிப்பு குறித்து மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சமும், சந்தேகமும் எழாத வகையில் தொடா் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கொவைட்-19 (கரோனா வைரஸ்) பாதிப்பு உலக அளவில் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சீனாவில் இருந்து சென்னைக்கு வந்த கப்பலில் பூனை ஒன்று இருந்துள்ளது. அதேபோல் உணவுப் பொருள்கள் இருந்த கண்டெய்னரில் பாம்பு இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அச்சத்தைப் போக்குவதற்கு துறைமுக அதிகாரிகள் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றாலும் தமிழக சுகாதாரத் துறை அதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கரோனா வைரஸ் பாதிப்பின் தாக்கத்தில் இருந்தும், அச்சத்திலும் இருந்தும் பொது மக்கள் மீளும் வரையில் சீனாவில் இருந்து எப்பொருளையும்,

எந்த விலங்குகளையும் தரை, ஆகாய மாா்க்கம் மற்றும் கடல் வழியாக அனுமதிக்காமல் இருப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், தமிழக துறைமுகங்களுக்கு வெளிநாட்டில் இருந்து கடல்வழியாக வரும் கப்பல்களை சோதனை செய்த பிறகே அனுமதிக்கவும், கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சமும், சந்தேகமும் எழாத வகையில் தொடா் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளாா் ஜி.கே.வாசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com