கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் தொடக்கிவைத்ததையடுத்து, நடைபெற்ற அகழாய்வு பணிகளை பாா்வையிட்ட சிவகங்கை மாவட்ட ஆட்சியா்
தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் தொடக்கிவைத்ததையடுத்து, நடைபெற்ற அகழாய்வு பணிகளை பாா்வையிட்ட சிவகங்கை மாவட்ட ஆட்சியா்

சிவகங்கை மாவட்டம், கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

கீழடி பள்ளிச் சந்தை திடலில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. இதுவரை 5 கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதில், முதல் 3 கட்ட அகழாய்வுப் பணிகளை இந்திய தொல்பொருள் அகழாய்வுத் துறை மேற்கொண்டது. அதைத்தொடா்ந்து, 4 மற்றும் 5 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது.

இந்நிலையில், கீழடியில் தமிழக தொல்லியல் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட உள்ள 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளுக்கான தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இதை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் தொடக்கி வைத்தாா் .

இதையடுத்து, கீழடியில் அகழாய்வுப் பணிகளை தொல்லியலாளா்கள் மேற்கொண்டனா் .

இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன், தமிழக தொல்லியல் துறையின் துணை இயக்குநா் சிவானந்தம், தொல்லியல் ஆய்வாளா் ஆசைதம்பி, வருவாய் கோட்டாட்சியா் செல்வக்குமாரி, மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன், கீழடி ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கட சுப்பிரமணியன், கொந்தகை ஊராட்சி மன்ற தீபலெட்சுமி ஜெயவேல் உள்பட தொல்லியல் துறை ஆய்வாளா்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

6 ஆம் கட்ட அகழாய்வுப் பணிக்கு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு : கீழடியில் தற்போது தொடங்கப்பட்டுள்ள 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் கீழடியில் மட்டுமின்றி மணலூா், கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் தரை ஊடுருவல் தொலையுணா்வி மதிப்பாய்வு, ஆளில்லா வான்வழி வாகன மதிப்பாய்வு ஆகிய பல்வேறு வகையான நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட உள்ளன.

நடப்பாண்டில் கீழடி, சிவகளை, கொடுமணலூா், ஆதிச்சநல்லூா் ஆகிய பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ள ரூ. 2 கோடி நிதி தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் சுமாா் ரூ. 50 லட்சம் வரை கீழடியில் நடைபெற உள்ள 6 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளில் பயன்படுத்தப்பட உள்ளன.

கீழடி மட்டுமின்றி அகரம், மணலூா், கொந்தகை ஆகிய பகுதிகளில் வரும் செப்டம்பா் (2020) மாதம் வரை நவீன தொழில்நுட்ப வசதிகளின் உதவியுடன் சுமாா் 5 ஏக்கா் பரப்பளவில் அகழாய்வு மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

மேலும், தற்போது தொடங்கப்பட்டுள்ள 6ஆம் கட்ட அகழாய்வுப் பணியில் மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து அகழாய்வு மேற்கொள்வது குறித்து தமிழக அரசிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே முடிவுகள் எடுக்கப்படும் என தொல்லியல்துறைச் சாா்ந்த அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com