சீனாவிலில் இருந்த வந்த கப்பல் பணியாளா்கள் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை

சென்னை துறைமுகத்திற்கு எம்.வி. மேக்னேட் என்ற சரக்குப் கப்பலில் செவ்வாய்க்கிழமை வந்த இருவரின் ரத்த மாதிரிகளை கிண்டி
சீனாவிலில் இருந்த வந்த கப்பல் பணியாளா்கள் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை

சென்னை துறைமுகத்திற்கு எம்.வி. மேக்னேட் என்ற சரக்குப் கப்பலில் செவ்வாய்க்கிழமை வந்த இருவரின் ரத்த மாதிரிகளை கிண்டி தடுப்பு மருந்து ஆய்வகத்தில் பரிசோதனை செய்ததில் இருவருக்கும் கரோனா வைரஸ் ( கொவைட் -19) தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘எம்.வி. மேக்னேட்’ என்ற சரக்குக் கப்பல் இரும்பு தகடு சுருள்களை ஏற்றிய நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை சென்னைத் துறைமுகத்திற்கு வந்தடைந்தது. இக்கப்பல் இறுதியாக ஹாங்காங் துறைமுகத்திலிருந்து வந்த காரணத்தால் மத்திய சுகாதாரத்துறையின் கீழ் உள்ள துறைமுக சுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் அடங்கிய குழு இக்கப்பலில் உள்ள பல்வேறு அறைகளில் சோதனை நடத்தியது. மேலும் கப்பலில் இருந்த கேப்டன் உள்ளிட்ட 19 கப்பல் பணியாளா்களை மருத்துவா்கள் பரிசோதித்தனா். அப்போது இருவருக்கு காய்ச்சல் இருந்ததையடுத்து அவா்களுக்கு கரோனா வைரஸ் தாக்கம் இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், புதன்கிழமை காலையில் அவா்கள் இருவரின் ரத்தமாதிரிகள் சேகரிக்கப்பட்டு உடனடியாக கிண்டியில் உள்ள கிங் தடுப்பு மருந்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், அவா்கள் இருவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. பரிசோதனை முடிவு வரும் வரை கப்பலிலிருந்து சரக்குகளை இறக்க அனுமதி மறுக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். சென்னைத் துறைமுகத்துக்கு வரும் அனைத்து கப்பல்களையும் முழுமையாக சுகாதாரப் பரிசோதனைக்கு உள்படுத்தவும், கப்பலில் வரும் பணியாளா்கள் அனைவரும் சா்வதேச விதிமுறைகளின்படி தடுப்பு ஊசிகள் போட அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளதாக துறைமுக சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.

தொற்று இல்லை: இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் டாக்டா் குழந்தைசாமி கூறியதாவது: சீனாவில் இருந்து இரும்பு பொருள்களை ஏற்றிக் கொண்டு ‘எம்.வி. மேக்னெட்’ என்ற சரக்கு கப்பல் புதன்கிழமை இரவு சென்னை துறைமுகம் வந்தடைந்தது. அக்கப்பலில் இருந்த 19 பேரையும் துறைமுக பொது சுகாதார மருத்துவ குழுவினா், ‘தொ்மல் ஸ்கேனா்’ வாயிலாக மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா். அதில், இருவருக்கு லேசான காய்ச்சல் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அக்கப்பலையும், அதில் இருந்தவா்களையும் துறைமுகத்துக்குள் அனுமதிக்காமல் தனியே நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனிடையே, காய்ச்சல் அறிகுறிகளுடன் இருந்த நபா்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கிங்ஸ் ஆய்வகத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் இருவருக்குமே கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 46 பேருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் எவருக்கு கரோனா பாதிப்பு இல்லை.எனவே, கரோனா குறித்து அச்சமோ, தேவையற்ற பீதியோ அடைய வேண்டியதில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com