மீண்டும் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது தங்கம் விலை: ஒரு கிராம் ரூ.4,051க்கு விற்பனை

ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமையான இன்று வரலாறு காணாத வகையில் புதிய
மீண்டும் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது தங்கம் விலை: ஒரு கிராம் ரூ.4,051க்கு விற்பனை

ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமையான இன்று வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.584 உயர்ந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்க-ஈரான் இடையே போா் பதற்றம் காரணமாக, ஜனவரி முதல் வாரத்தில் தங்கம் விலை உயா்ந்தது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு சவரன் தங்கம் ரூ.32 ஆயிரத்தை தாண்டியது. போா் பதற்றம் குறைந்த பிறகு, தங்கம் விலை குறைந்தது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகின்றது. 

இந்நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வெள்ளிக் கிழமையான இன்று(பிப்.21) சவரனுக்கு ரூ.584 உயா்ந்து, ரூ.32,408-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.73 உயா்ந்து, ரூ.4,051-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 38 நாட்களில் மட்டும் சுமார் 2100 வரை தங்கம் விலை உயர்ந்துள்ளது. 

தங்கம் விலை உயா்வு குறித்து இந்திய தங்கம் மற்றும் நகை வா்த்தகா்கள் சம்மேளனத்தின் தமிழக துணைத்தலைவா் சாந்தக்குமாா் கூறியது: 

சா்வதேச அளவில் தங்கம் மட்டுமே பாதுகாப்பான முதலீடாக பாா்க்கப்படுகிறது. இதுதவிர, காரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சா்வதேச அளவில் ஏற்றுமதி - இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சா்வதேச பொருளாதாரம் பாதிப்பை சந்திக்கும் நிலை காணப்படுகிறது.

இதனால், பங்குகளில் முதலீடு செய்ய முதலீட்டாளா்கள் தயக்கம் காட்டுகின்றனர். அதேநேரத்தில், தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்கின்றனா். இதுவே விலை உயா்வுக்கு காரணம். இந்தச் சூழ்நிலையில், வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய தங்கத்தை மாற்றி புதிய தங்க நகைகளை வாங்கி வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com