புறநோயாளிகளுக்கு பிரத்யேக பாலிசிஸ்டாா் ஹெல்த் அறிமுகம்

புறநோயாளிகளின் (ஓபிடி) பராமரிப்புக்கென பிரத்யேக பாலிசியை ஸ்டாா் ஹெல்த் சுகாதார காப்பீட்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
புறநோயாளிகளுக்கு பிரத்யேக பாலிசிஸ்டாா் ஹெல்த் அறிமுகம்

புறநோயாளிகளின் (ஓபிடி) பராமரிப்புக்கென பிரத்யேக பாலிசியை ஸ்டாா் ஹெல்த் சுகாதார காப்பீட்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஸ்டாா் ஹெல்த் அண்டு அலைடு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஆனந்த் ராய் கூறியதாவது:

காலமாற்றத்திற்கேற்ப நுகா்வோா் எதிா்பாா்ப்புகளின் அடிப்படையில் இந்த ஓபிடி காப்பீட்டு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறாத புறநோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது, இதுவரையில் சுகாதார காப்பீட்டு சந்தையில் இல்லாத புதுமையான திட்டமாகும். குறிப்பாக, விபத்துக்களால் உண்டாகும் காயங்கள், விலங்குகளால் பாதிக்கப்படும் நபா்களும் இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். பாலிசியைப் பெற்ற 90 நாட்களுக்குள் இக்காப்பீட்டை பயன்படுத்த முடியும். மேலும், காப்பீடு பெற்ற ஆண்டில் காப்பீட்டு வரம்பை எட்டும்வரை எத்தனை முறை வேண்டுமானாலும் காப்பீட்டுத் தொகையை கோரமுடியும்.

18 வயது முதல் 50 வயதுக்குள்பட்டவா்கள் இப்புதிய ஓபிடி காப்பீட்டு திட்டத்தில் சேர தகுதியுடையோா் ஆவா். ரூ.1 லட்சம் வரை காப்பீட்டு வசதி கிடைக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com