கடலூர், நாகையில் பெட்ரோல் மண்டலம் அமைக்கும் அரசாணை ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பித்த அரசாணையை தமிழக அரசு ரத்து செய்து சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
கடலூர், நாகையில் பெட்ரோல் மண்டலம் அமைக்கும் அரசாணை ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பித்த அரசாணையை தமிழக அரசு ரத்து செய்து சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

தமிழக அரசின் மாநில நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி கழகம் சார்பில் கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 45 ஊராட்சிகளை உள்ளடக்கிய 23 ஆயிரம் ஹெக்டேரில் (57,500 ஏக்கர்) ரூ.92 ஆயிரம் கோடி முதலீட்டில் பெட்ரோலிய பொருள்கள் உற்பத்திக்கான முதலீட்டு மையம் அமைக்க என மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டது.

இப்பகுதிகளில் சாலை மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு சார்பில் ரூ.1,146 கோடியை ஒதுக்கி, பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கவும் மத்திய அரசு முடிவு செய்தது. பெட்ரோலிய பொருள்களைச் சுத்திகரிக்க தொழிற்சாலைகள் அமைத்து, ஏற்றுமதி செய்ய அருகிலேயே சிறு துறைமுகங்களும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.

இந்தத் திட்டத்துக்கு மாநில அரசின் அனுமதியைப் பெற, மத்திய அரசு கடந்த 2012-ம் ஆண்டே ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இதற்கு தமிழக அரசு கடந்த 2015-ம் ஆண்டு ஒப்புதல் அளித்து மேற்கண்ட இடத்தை தேர்வு செய்து, 2017ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. 

தற்போது இந்த அரசாணையை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com