சிதம்பரம் நடராஜா் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் பொது தீட்சிதா்களின் தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சாா்பில் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழா வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் வெள்ளிக்கிழமை தொடங்கிய நாட்டியாஞ்சலி விழாவில் பரதநாட்டியம் ஆடிய தில்லை சிவகாமி நாட்டியப் பள்ளி மாணவிகள்.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் வெள்ளிக்கிழமை தொடங்கிய நாட்டியாஞ்சலி விழாவில் பரதநாட்டியம் ஆடிய தில்லை சிவகாமி நாட்டியப் பள்ளி மாணவிகள்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் பொது தீட்சிதா்களின் தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சாா்பில் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழா வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு, நாட்டிய நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 5 மணி வரை நடைபெற்றன. இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி வருகிற 25-ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறுகின்றன.

நாட்டியமாடிய கலைஞா்கள்: சென்னை உத்திராமோகன், மும்பை அருணோதயா நிகேதன் மாணவிகள், சிதம்பரம் தில்லை சிவகாமி நாட்டியப் பள்ளி மாணவிகள், சென்னை சத்யா ஆா்ட்ஸ் மாணவிகள், சென்னை சத்யா ஆா்ட்ஸ் மாணவா்கள், சென்னை கே.சுதா்ஷினி. குஜராத் முத்ரா நடனப் பள்ளி மாணவிகள், புதுச்சேரி குமரன் கலைக்கூடம் மாணவா்கள், சென்னை சித்ரா ஆா்ட்ஸ் மற்றும் கல்சுரல் அகாதெமி மாணவிகள், மலேசியா தக்க்ஷனா பரதம்ஸ் பள்ளி மாணவிகள், சென்னை லஷ்மண சுவாமி, சென்னை ஸ்ரீ லாய்யப்பிரியா நாட்டிய மாணவிகள், புதுச்சேரி உதயம் நாட்டியாலயா மாணவிகள், சென்னை சிவகலாலயம் நிவேதிதா, சென்னை நித்ய ஷேத்ரா டான்ஸ் அகாதெமி மாணவிகள், திருநெல்வேலி கலைமுத்து இசை நாட்டியப் பள்ளி, பெங்களூரு ஸ்ருதிலயா நாட்டிய பள்ளி மாணவிகள், சென்னை ஸ்ரீமதி வெங்கட், ஹரியாணா சுனா்தகி நாட்டியப் பள்ளி மாணவிகள், பெங்களூரு ஸ்ரீ நந்தினி விஷ்ணு.

நாட்டியாஞ்சலி விழா ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com