முதல்வர் கேள்விக்கு ஸ்டாலினால் பதில் கூற முடியவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சி.ஏ.ஏ.வால் பாதிக்கப்பட்டோர் பற்றி முதல்வர் கேட்ட போது ஸ்டாலினால் எதுவும் கூற இயலவில்லை என்று தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 
முதல்வர் கேள்விக்கு ஸ்டாலினால் பதில் கூற முடியவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சி.ஏ.ஏ.வால் பாதிக்கப்பட்டோர் பற்றி முதல்வர் கேட்டபோது ஸ்டாலினால் எதுவும் கூற இயலவில்லை என்று தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்த ஒரு விவாதத்தின்போது குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினால் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார். மேலும், தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறுங்கள். சரி செய்கிறோம் என்று பேசினார். 

இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், 'சி.ஏ.ஏ.வால் பாதிக்கப்பட்டோர் பற்றி முதல்வர் கேட்ட போது ஸ்டாலினால் எதுவும் கூற இயலவில்லை. ஸ்டாலின் ஆதாரத்துடன் கூறியிருந்தால் அதற்கு முதல்வர் ஆதாரத்துடன் பதில் கூறி இருப்பார். சி.ஏ.ஏ., என்.பி.ஆர். சட்டங்களால் தமிழக மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை' என்று கூறினார். 

தொடர்ந்து, 'திறமையானவர்களுக்கு அதிமுக அரசு மதிப்பு அளிக்கும். அதன் காரணமாகவே டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com