திமுக ஆட்சிக் காலத்தில் இருந்ததை விட அதிமுக ஆட்சியில் கடன் சுமை அதிகரித்துள்ளது: கனிமொழி

திமுக ஆட்சிக் காலத்தில் இருந்ததை விட அதிமுக ஆட்சியில் கடன் சுமை அதிகரித்துள்ளது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். 
திமுக ஆட்சிக் காலத்தில் இருந்ததை விட அதிமுக ஆட்சியில் கடன் சுமை அதிகரித்துள்ளது: கனிமொழி

திமுக ஆட்சிக் காலத்தில் இருந்ததை விட அதிமுக ஆட்சியில் கடன் சுமை அதிகரித்துள்ளது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்‌. தொடர்ந்து அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 

தமிழகத்தில் ஆட்சியை எப்படி நடத்துவது என்பது தெரியாமல், பட்ஜெட்டை எப்படி போடுவது என்பது தெரியாமல் ஒரு அடிப்படை இல்லாமல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்த நிலையில் இந்த ஆட்சியில் தமிழகத்தின் கடன் 4 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. எந்தவித வருமானத்திற்கும் வழி இல்லாமல் கடன் இல்லாத பணத்தை செலவு செய்தால் மேலும் மேலும் தமிழகத்தின் கடன்சுமை தான் அதிகரிக்கும். வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லாமல் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

பின்னர், சிறுபான்மையினர் நலனுக்காக குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவில் சில சரத்துகளை நீக்கக்கோரி பிரதமருக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியது தொடர்பாக கேட்டதற்கு, 'இதெல்லாம் தேவையே இல்லை. மாநிலங்களவையில், மசோதாவுக்கு எதிராக அதிமுக வாக்களித்திருந்தாலே போதும் இந்த சட்ட மசோதா நிறைவேறி இருக்காது' என பதிலளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com