தருமபுரியில் ஜெயலலிதா 72ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழா தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் அக்கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
தருமபுரியில் ஜெயலலிதா 72ஆவது பிறந்தநாள் விழா   கொண்டாட்டம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழா தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் அக்கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

அதிமுக மாவட்ட அவைத்தலைவர் தொ.மு.நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் கட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர் கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. 

இவ்விழாவில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் டி.ஆர்.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com