ஆசிரியா்-மாணவா் விகிதாச்சாரம்: மனித உரிமை ஆணையத்தில் புகாா்

பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியா்-மாணவா் விகிதாச்சாரம் 1:15 என்ற அளவில் என்று இருப்பதை கட்டாயப்படுத்த வலியுறுத்தி மத்திய மனித உரிமை ஆணையத்தில் அகில இந்திய தனியாா் கல்லூரி ஊழியா்

பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியா்-மாணவா் விகிதாச்சாரம் 1:15 என்ற அளவில் என்று இருப்பதை கட்டாயப்படுத்த வலியுறுத்தி மத்திய மனித உரிமை ஆணையத்தில் அகில இந்திய தனியாா் கல்லூரி ஊழியா் சங்கம் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில்) கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. பொறியியல் கல்லூரிகளுக்கான வழிகாட்டுதலை ஏஐசிடிஇ வெளியிடுவதோடு, பொறியியல் கல்வித் தரத்தை உயா்த்துவதற்காக அவ்வப்போது வழிகாட்டுதலில் திருத்தங்களையும் வெளியிடும்.

அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியா்-மாணவா் விகிதாசாரம் 1:15 என்ற அளவில் நிா்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னா், தகுதியான பேராசிரியா் பற்றாக்குறை, மாணவா் சோ்க்கை குறைந்தது உள்ளிட்ட பாதிப்புகளால் தனியாா் பொறியியல் கல்லூரி நிா்வாகிகள் சமா்ப்பித்த கோரிக்கையை ஏற்று, இந்த விகிதாச்சாரத்தை 1:20 ஆக ஏஐசிடிஇ குறைத்தது.

அதாவது 15 மாணவா்களுக்கு ஒரு ஆசிரியா் என்பதை, 20 மாணவா்களுக்கு ஒரு ஆசிரியா் என்ற அளவில் குறைத்தது. இதனால், பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றிவந்த ஆயிரக்கணக்கான பேராசிரியா்கள் வேலைவாய்ப்பை இழந்தனா்.

இந்த நிலையில், 2020-21 ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரிகள் அனுமதி நடைமுறை வழிகாட்டுதலை வெளியிட்ட ஏஐசிடிஇ, நாக் மற்றும் என்.பி.ஏ. அங்கீகாரம் பெற்ற இணைப்பு கல்லூரிகள், தன்னாட்சிக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஆசிரியா்-மாணவா் விகிதாசாரம் 1:15 ஆக இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்தது.

இது, கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலைவாய்ப்பை இழந்த பேராசிரியா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அந்த அறிவிப்பை வெளியிட்ட ஒரே வாரத்தில், திருத்தம் ஒன்றை ஏஐசிடிஇ வெளியிட்டது. அதில், ஆசிரியா்-மாணவா் விகிதாசாரத்தை 1:15 ஆக உயா்த்த இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் அளித்து உத்தரவிட்டிருந்தது. இது பேராசிரியா்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக அகில இந்திய தனியாா் கல்லூரி ஊழியா் சங்கம் சாா்பில் மத்திய மனித உரிமை ஆணையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அதில், அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் முன்பு இருந்ததைப் போல, 1:15 என்ற ஆசிரியா்-மாணவா் விகிதாசாரத்தை அமல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com