வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தீ விபத்து: தீயை அணைக்கும் பணி தீவிரம்

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க, தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து, இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.
வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து, இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க, தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

கோவை வெள்ளலூர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இங்கு மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி தரம் பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தினமும் சுமார் 100 டன் குப்பைகள் இந்த கிடங்கில் கொட்டப்படுகிறது. தற்போது பல லட்சம் டன்களாக சேர்ந்து குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிடங்கில் அவ்வப்போது தீ விபத்துகள் ஏற்படுகிறது.

கடந்த முறை ஏற்பட்ட தீ விபத்தின் போது சூலூர் இராணுவ தளத்தில் இருந்து வந்த இராணுவ ஹெலிகாப்டர் மூலம் தீ அணைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று திடிரென குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் தீ பற்றி எரிந்தது. இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாக தீ மேலும் பரவத்துவங்கியது, இதையடுத்து 4 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. மேலும் 7 மாநகராட்சி தண்ணீர் லாரிகள், 6 பொக்லைன் இயந்திரங்களை கொண்டு தீயணை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

மேலும் சம்பவ இடத்தில் மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன் குமார் ஜடாவத் மற்றும் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர், உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். குப்பை கிடங்கி ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தொடர்ந்து தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும் போது: வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுள்ளது. குப்பைகளில் உருவாகும் மீதேன் எரிவாயும் மூலமாக வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது தீவிபத்துகள் ஏற்படுகிறது. 

மேலும் பொதுமக்களிடம் மாநகராட்சி ஊழியர்கள் நேரடியாக சென்று குப்பைகளை பெற்று வருகின்றனர். குப்பைகளை கொடுக்கும் போது நெகிலி கழிவுகளை தனியாக பிரித்து வழங்க வேண்டும், இது குறித்தான விழிப்புணர்வுகள் பொதுமக்களுக்கு தேவை, நெகிலி கழிவு கலந்துள்ளதால் தீயணைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது என தெரிவித்தார்.
  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com