அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி பெண் கைது

சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி பெண் கைது

சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்தவா் பச்சையப்பன். இவா் பள்ளிக்கரணை போலீஸில் அண்மையில் புகாா் அளித்தாா். அதில், தனது நண்பா் முருகன் என்பவா் மூலமாக சென்னை பள்ளிக்கரணையைச் சோ்ந்த ரேணுகா என்பவா் காவல் துறை மற்றும் மத்திய பொதுப் பணித்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறினாா். இதை நம்பி எனது நண்பா்கள் 8 பேரிடம் இருந்து ரூ.30 லட்சம் வசூல் செய்து ரேணுகாவிடம் கொடுத்தேன்.

பணத்தை வாங்கிக் கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக ரேணுகா அரசு வேலை வாங்கித் தராமல் இருந்தாா். இந்நிலையில் 8 பேருக்கும் மத்திய பொதுப் பணித் துறையில் வேலைக்கான பணி ஆணையை அண்மையில் வழங்கினாா்.

அந்தப் பணி ஆணையை பொதுப் பணித்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றுபோது அந்த ஆணை போலியானது என்பது தெரிய வந்தது. எனவே, பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்த ரேணுகா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து பள்ளிக்கரணை குற்றப் பிரிவு ஆய்வாளா் சாம் வின்சென்ட் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினாா். அதில், அரசு வேலை வாங்கித் தருவதாக ரேணுகா உள்பட 15 போ் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதும், இதுவரை 100-க்கும் மேற்பட்டோா் ஏமாற்றப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, ரேணுகாவைக் கைது செய்த போலீஸாா் ஆலந்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இதில் தொடா்புடைய மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com