குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரோட்டில் பாஜகவினர் பேரணி

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஈரோடு பெருந்துறை ரோடு பகுதியில் பேரணி நடைபெற்றது. 
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரோட்டில் பாஜகவினர் பேரணி

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஈரோடு பெருந்துறை ரோடு பகுதியில் பேரணி நடைபெற்றது. 

ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் எஸ்.ஏ.சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற பேரணியில் வி.சி.அஜித்குமார் ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர், ஜெகதீஸ் இந்து முன்னணி ஈரோடு மாவட்ட தலைவர், பூசப்பன் இந்து முன்னணி மாநில துணை தலைவர், பே.வைரவேல் கோட்ட பொறுப்பாளர், என்.பி.பழனிசாமி மாநில வழக்கறிஞர் அணி அமைப்பாளர், ஏ.சரவணன் மாநில பிரச்சார அணி பொறுப்பாளர், சி.கே.சரஸ்வதி மாநில செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மேலும், ஏ.பி.முருகானந்தம் தேசிய இளைஞர் அணி துணைத் தலைவர், குணசேகரன் மாவட்ட பொது செயலளார், ஈஸ்வரமூர்த்தி மாவட்ட பொது செயலாளர், விவேகானந்தன் மாவட்ட பொது செயலாளர், இ.பி.கிருஷ்ணகுமார் மாவட்ட செயலாளர், சின்னதுரை மாவட்ட துணைத் தலைவர், தீபக் ராஜா மாவட்ட பொருளாளர் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொணடனர். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை இந்தியாவில் வாழும் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 

எனவே யாரும் அச்சப்படத் தேவையில்லை, பிரிவினை உருவாக்கும் அரசியல் கட்சிகளும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது. பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் மக்கள் மத்தியில் பிரச்னையை ஏற்படுத்துவது போன்ற போராட்டங்களை தடுக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சியினர் குறிப்பிட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com