தமிழ் இல்லாமல் போனதுக்கு தமிழர்கள்தான் காரணம்: பேரூர் ஆதின சாந்தலிங்க மருதாசல அடிகளார்

தமிழ் இல்லாமல் போனதுக்கு தமிழர்கள்தான் காரணம் என்று பேரூர் ஆதின சாந்தலிங்க மருதாசல அடிகளார் கூறினார். கோவை தமிழ் மொழிக் காப்புக் கூட்டியக்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் இல்லாமல் போனதுக்கு தமிழர்கள்தான் காரணம்: பேரூர் ஆதின சாந்தலிங்க மருதாசல அடிகளார்

தமிழ் இல்லாமல் போனதுக்கு தமிழர்கள்தான் காரணம் என்று பேரூர் ஆதின சாந்தலிங்க மருதாசல அடிகளார் கூறினார். கோவை தமிழ் மொழிக் காப்புக் கூட்டியக்கம் சார்பில் கோவை டாடாபாத் பகுதியில் உண்ணாவிரத  போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தொடக்கநிலைக் கல்வியில் தாய்மொழி வழியாகவே கல்வி வழங்கப்பட வேண்டும். தமிழக அரசு இதற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தொடர்ந்து உயர்நிலை மற்றும் கல்லூரிக் கல்விகளில் தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த ஆவன செய்ய வேண்டும். தமிழே ஆட்சிமொழி என்பதை தமிழக அரசு அனைத்து துறைகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழக அரசின் அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்து கோயில்களிலும், பிற கோயில்களிலும் குடமுழுக்கு வழிபாடுகள் ஆகிய நிலைகளில் தமிழையே பயன்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள பெற்றோர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளுக்கு தமிழ்மொழிபெயர்களையே சூட்ட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் தங்களது முகப்பு விளம்பர பலகைகளில் அரசு ஆணைப்படி முதல்மொழியாக தமிழை பயன்படுத்த வேண்டும்.தமிழே கற்றுத் தராத பள்ளிகளில், தமிழ் மொழிப்பாடம் கற்றுத் தர தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். மராட்டிய அரசினை போன்று தாய்மொழியில் கல்வி கற்றவர்களுக்கு தமிழக அரசுப் பணிகளில் 80 விழுக்காடு வழங்க சட்டம் இயற்ற வேண்டும்.

கர்நாடக மாநில அரசினை போன்று தமிழக அரசு தமிழ்மொழி ஆணையம் அமைக்க வேண்டும். ஆணையத்தின் கொடியாக மூவேந்தர்களின் மீன், புலி, வில் சின்னங்களைப் பயன்படுத்த வேண்டும், ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய பேரூர் ஆதின சாந்தலிங்க மருதாசல அடிகளார்,

அயல் மொழி ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது. பள்ளிகளில் ஆங்கிலம் அதிகமாக இருக்கின்றது. அயல் மொழிகளிலே வழிபாடு நடைபெறுகிறது. தமிழ் மொழியிலேயே இறைவழிபாடு இருக்க வேண்டும். அனைத்து கோயில்களிலும் தமிழ் மொழியிலேயே வழிபாடு இருக்க வேண்டும்.

கோவையில் உள்ள மருதமலை, கோனியம்மன், தண்டு மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களிலும் தமிழ் வழிபாடு வேண்டும். குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் அதிகமான இடதுக்கீடு வழங்க வேண்டும்.

கோயில்களில் தமிழ் இல்லாமல் போனதுக்கு தமிழர்கள்தான் காரணம். கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என பொது மக்கள் தான் வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com