நடிகர் ரஜினிகாந்துடன் காவல் துறை நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்துடன் காவல் துறை நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் திடீரென சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
நடிகர் ரஜினிகாந்துடன் காவல் துறை நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்துடன் காவல் துறை நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் திடீரென சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முன்னதாக முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதல் ஆளாக வந்துப் போராடுவதாகத் தெரிவித்தார். பின்னர் தில்லி வன்முறைச் சம்பவங்களை உளவுத்துறை கட்டுப்படுத்த தவறியதாகவும் குற்றம்சாட்டினார்.

அரசியல் கட்சிகள் மதத்தின் அடிப்படையில் மக்களைத் தூண்டிவிட்டு, போராட்டங்களில் ஈடுபட வைக்கின்றன. இதை ஆரம்பத்திலேயே இரும்புக் கரம் கொண்டு அடக்கவில்லை என்றால், எதிா்காலத்தில் மேலும் சிக்கலை ஏற்படுத்திவிடும். இதுபோன்ற சூழலில் ஊடகங்கள் உறுதுணையாக இருந்து நிலைமையைக் கட்டுப்படுத்தும் வகையில் மிகக் கவனமாக செய்திகளை வெளியிட வேண்டும் என்று தெரிவித்தார்.

ஒருவேளை வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பதவியை ராஜிநாமா செய்துவிட்டுச் செல்லவேண்டும் எனவும் விமர்சித்தார்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துடன், காவல் துறை நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு திடீரென சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது போலீஸ் பாதுகாப்பு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் தனது வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என ரஜினிகாந்த் மறுத்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துக்ளக் விழாவில் பெரியார் குறித்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் ரஜினி வீட்டுக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக போயஸ் கார்டன் வீட்டுக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தற்போது அதனை நீட்டித்து வழங்குவது தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும், அதனை ரஜினி மறுத்துள்ள நிலையில், உயரதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக துணை ஆணையர் திருநாவுக்கரசு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com