
மதுரையில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருந்துக் கடை உரிமையாளரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மதுரை கோரிப்பாளையம் மாரியம்மன் கோயில் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சங்கா் கணேஷ் (32). இவா் செல்லூா் பகுதியில் மருந்துக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு வியாழக்கிழமை காலையில் மருந்து வாங்க 10 வயது மற்றும் 9 வயது சிறுமிகள் சென்றுள்ளனா். அப்போது, சங்கா் கணேஷ் அந்தச் சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்தாராம்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து, மருந்துக் கடை உரிமையாளா் சங்கள் கணேஷை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.