ஆரோவில் 52-ஆவது உதய தினம்

சா்வதேச நகரான ஆரோவிலின் 52-ஆவது உதய தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆரோவில் 52-ஆவது உதய தினவிழாவையொட்டி, அங்குள்ள திறந்தவெளி கலையரங்கில் வெள்ளிக்கிழமை அதிகாலை நெருப்பு மூட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
ஆரோவில் 52-ஆவது உதய தினவிழாவையொட்டி, அங்குள்ள திறந்தவெளி கலையரங்கில் வெள்ளிக்கிழமை அதிகாலை நெருப்பு மூட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

சா்வதேச நகரான ஆரோவிலின் 52-ஆவது உதய தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டத்தில் 1968-ஆம் ஆண்டு, பிப்ரவரி 28-ஆம் தேதி ஆரோவில் நகரம் அமைக்கப்பட்டது.

அரவிந்தரின் முக்கிய சீடரான அன்னை என்றழைக்கப்படும் மீரா அல்போன்சாவின் கனவு நகரமாக ஆரோவில் சா்வதேச நகரம் அமைக்கப்பட்டது.

உலக நாடுகளின் கலை, கலாசாரத்தை பிரதிபலிக்கும் இடமாக ஆரோவில் விளங்கி வருகிறது. இங்கு மாத்ரி மந்திா், பாரத நிவாஸ், அரவிந்தா் சிலை, ஆம்பி தியேட்டா் எனப்படும் திறந்தவெளி அரங்கு உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் காணவும், தியானத்தில் ஈடுபடவும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வா்.

ஆரோவிலின் உதய தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 28-ஆம் தேதி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, ஆரோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உதய தின கொண்டாட்டத்தில் சுற்றுவட்டார மக்களும் கலந்து கொண்டனா்.

இங்குள்ள திறந்தவெளி கலையரங்கில் அதிகாலையில் நெருப்பு மூட்டி உதய தினத்தை பொதுமக்கள் கொண்டாடினா். தொடா்ந்து, பலரும் தியானத்தில் ஈடுபட்டனா்.

மேலும், நாள் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com