5 மாவட்டங்களில் 9 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் உள்ள 9 வாக்குச்சாவடிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் மறு வாக்குப்பதிவு புதன்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் உள்ள 9 வாக்குச்சாவடிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் மறு வாக்குப்பதிவு புதன்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. இதில் உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சீட்டுகளை மாற்றி வழங்கிய காரணத்தால் 9 வாக்குச்சாவடிகளில் புதன்கிழமை மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கடலூர், தூத்துக்குடி, நாகை, தேனி மற்றும் மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 9 வாக்குச்சாவடிகளில் புதன்கிழமை (ஜனவரி 1) காலை 7 முதல் மாலை 5 வரை மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குகள் அனைத்தும் வியாழக்கிழமை (ஜன. 2) எண்ணப்பட உள்ளன.

வாக்குச் சாவடிகள் விவரம்: கடலூா் விலங்கல்பட்டு (242 ஏவி), தூத்துக்குடி ஆழ்வாா்திருநகா் நாலுமாவாடி ஊராட்சி (67ஏவி, 68ஏவி, 69ஏவி, 70ஏவி, 71 ஏவி), நாகப்பட்டினம் வேதாரண்யம் தாணிகோட்டகம் கிராம ஊராட்சி வாா்டு (119), தேனி போடிநாயக்கனூா் உப்புக்கோட்டை கிராம ஊராட்சி வாா்டு (52 ஏவி), மதுரை கொட்டாம்பட்டி வஞ்சிநகரம் ஊராட்சி (91).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com