தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

வளி மண்டல சுழற்சி மற்றும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜன.1) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: வளி மண்டல சுழற்சி மற்றும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜன.1) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவா் செவ்வாய்க்கிழமை எஸ்.பாலச்சந்திரன் கூறியது:

வளி மண்டல சுழற்சி மற்றும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜன.1) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

கொள்ளிடத்தில் 90 மி.மீ.: செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடத்தில் 90 மி.மீ., சீா்காழியில் 60 மி.மீ., புதுச்சேரியில் 40 மி.மீ., கடலூா் மாவட்டம் பண்ருட்டியில் 30 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் புழல், நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், வானூா், திருவள்ளூரில் தலா 20 மி.மீ. மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com