ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா: புத்தாண்டை முன்னிட்டு திரளாகக் குவிந்த பக்தர்கள்

காலை முதல் கோயில்களில் திரளாகக் குவியும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா: புத்தாண்டை முன்னிட்டு திரளாகக் குவிந்த பக்தர்கள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலய வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து 6-ம் நாள் புதனக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. 2020 ஆங்கிலப் புத்தாண்டு நாளான இன்று நம்பெருமாள் புஜகீர்த்தி சவுரி கொண்டை, வைர அபய ஹஸ்தம், லட்சுமி பதக்கம், கையில் தங்க கிளி, முத்துச்சரம், பவள மாலை, காசு மாலை ஆகிய திரு ஆபரணங்களுடன் அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

புத்தாண்டை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில், திருவானைக்கா கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில், உறையூர் வெக்காளியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

காலை முதல் கோயில்களில் திரளாகக் குவியும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com