திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம்

திருச்சியில் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்   விவசாயிகள் திருச்சி ஜங்சனில் நாமம் அணிந்துகொண்டு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 
திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம்

திருச்சியில் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்   விவசாயிகள் திருச்சி ஜங்சனில் நாமம் அணிந்துகொண்டு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 

140 ஆண்டுகள் வரலாறு காணாத  வறட்சியை தமிழகம் கடந்த 2016ஆம் ஆண்டு கண்டது. 2016ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க கோரியும், உச்ச நீதிமன்றமே அனைத்து விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யக் கோரியும்,  நகை ஏலம்,  ஜப்தி நடவடிக்கையை நிறுத்திட கோரியும், வெங்காயத்தை விவசாயிகளிடம் அரசே நியாமான விலையில் கொள்முதல் செய்து குறைவான விலையில் மக்களுக்கு கொடுக்க கோரியும்,  காவிரியில்  வரும் வெள்ளநீரை 30 ஆண்டுகளுக்கு முன்பே மேட்டூர் - அய்யாறு - உப்பாறு இணைப்பு திட்டம், காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு திட்டம் அறிவித்ததை நிறைவேற்ற கோரியும்,  கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசை வலியுறுத்த கோரியும்,  இடுக்கி மாவட்டத்தை கேரளாவில் இருந்து எடுத்து தமிழகத்துடன் இணைத்து முல்லை பெரியார் பிரச்சனை,  58ம் கால்வாயில் வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்க கோரியும் அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

அதுமட்டுமின்றி, ஆலடியாறு டேமில் துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், உத்தமபாளையம், போடி, தேனி,  பெரியகுளம், மஞ்சள் ஆற்றை தாண்டி தேவன்கோட்டை வெள்ளோடு, திண்டுக்கல் எரியோடு கடவூர் வழியாக திருச்சி வையம்பட்டி பொன்னனையாறு டேமில் இணைக்க கோரியும்,  தமிழக எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீரை வீணாக அரபிக்கடலில் கலக்காமல் தடுப்பதும், ஊட்டியில் பெய்யும் மழைநீரை மாயாறு வழியாக கர்நாடகத்திற்கு செல்லாமல் பவானி டேம்-க்கு திருப்பி விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகயும் முன்வைத்துள்ளனர். 

மேலும், '10 ஆண்டுகள் முன்பு குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரம் செய்த அரசு தற்பொழுது இலாபகரமான விலையை விவசாயிகளுக்கு கொடுக்காமல், விவசாயத்தை விட்டு விவசாயிகளை விரட்டி மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு 1 மடங்கு விளைச்சலுக்கு பதில் 5 மடங்கு உற்பத்தியாகும் மரபணு மாற்றப்பட்ட உணவை உற்பத்தி செய்து இளைஞர்களுக்கு கொடுத்து ஆண்மை இழக்கவும்,  பெண்கள் குழந்தை பெற முடியாமலும் செய்கிறது. எனவே, மரபணு மாற்றப்பட்ட விதை உணவை இறக்குமதி செய்வதை தடுக்க வேண்டும்' என்றும் வலியுறுத்தியுள்ளனர். 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு  தலைமையில் விவசாயிகள் திருச்சி ஜங்சனில் விவசாயிகள் உடையில் நாமம் அணிந்துகொண்டு போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

இன்று (02.01.2020) முதல் 08.01.2020 வரை 7 நாட்கள் (காலை 8 மணி முதல் இரவு 6 மணி வரை) தொடர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com