Enable Javscript for better performance
விராலிமலை ஒன்றியம்: தபால் ஓட்டுகளில் திமுகவுக்கு அதிக வாக்குகள்- Dinamani

சுடச்சுட

    

    விராலிமலை ஒன்றியம்: தபால் ஓட்டுகளில் திமுகவுக்கு அதிக வாக்குகள்

    By DIN  |   Published on : 02nd January 2020 10:33 AM  |   அ+அ அ-   |    |  

    உள்ளாட்சித் தேர்தல்

     

    தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் கடந்த டிச.27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. புதிதாக பிரிக்கப்பட்ட 10 மாவட்டங்களைத் தவிா்த்து மீதமுள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 91,975 பதவி இடங்களை நிரப்புவதற்காக இரண்டு கட்டங்களாகத் தோ்தல் நடைபெற்றது. 

    தொடர்ந்து, உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திருச்சி மாவட்டம் விராலிமலை ஒன்றியத்தில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விராலிமலை மேற்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தேர்தலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதில், அதிமுக - 36, திமுக- 79, அமமுக- 3 சுயேச்சை - 2 செல்லாதவை- 2  என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai