தங்கம் விலை 30 ஆயிரத்தைத் தாண்டியது; புதிய உச்சம் தொட்டது

சென்னையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை ரூ.30 ஆயிரத்தைத் தாண்டியது.
தங்கம் விலை 30 ஆயிரத்தைத் தாண்டியது; புதிய உச்சம் தொட்டது


சென்னை: சென்னையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை ரூ.30 ஆயிரத்தைத் தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், ஒரே நாளில் பவுனுக்கு ரூ.456 உயர்ந்து விற்பனையானது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.57 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.3,793க்கு விற்பனையானது. புதிய உச்சமாக ஒரு பவுன் தங்கம் விலை ரூ.456 உயர்ந்து, ரூ.30,344க்கு விற்பனை செய்யப்பட்டது. 

சென்னையில் வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.3,736-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.3,793க்கு விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலையும் சில்லறை விற்பனையில் 70 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.51.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ..................... 3,793
1 பவுன் தங்கம் ..................... 30,344
1 கிராம் வெள்ளி .................. 51.10
1 கிலோ வெள்ளி .................. 51,100

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் .................... 3,736
1 பவுன் தங்கம் ..................... 29,888
1 கிராம் வெள்ளி .................. 50.40
1 கிலோ வெள்ளி ................. 50,400
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com