உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி அடைந்தது ஏன்? அன்வர் ராஜா விளக்கம்

குடியுரிமைச் சட்டத்தை அதிமுக ஆதரித்ததால்தான் உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி ஏற்பட்டுள்ளது என்று அன்வர் ராஜா கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி அடைந்தது ஏன்? அன்வர் ராஜா விளக்கம்

குடியுரிமைச் சட்டத்தை அதிமுக ஆதரித்ததால்தான் உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி ஏற்பட்டுள்ளது என்று அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா கூறியுள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனது மகன் மற்றும் மகள் தோல்வியுற்றதற்கான காரணம் குறித்து செய்தியாளர்களிடம் அன்வர் ராஜா விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, குடியுரிமைச் சட்டத்தை அதிமுக ஆதரித்ததால்தான் உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி ஏற்பட்டுள்ளது என்று அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, உள்ளாட்சித் தேர்தலில் அரசுக்கு எதிராக சிறுபான்மையினர் வாக்களித்துள்ளனர். தேசியக் குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதும் அமலாகும் என்ற அச்சம் சிறுபான்மையினருக்கு எழுந்துள்ளது. சிறுபான்மையினர் அச்சப்படுவதால் அதிமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும். 

தேசியக் குடிரிமைச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அதிமுக அரசு சொல்லும் என நம்புகிறேன். அசாமில் மட்டுமே தேசியக் குடியுரிமைச் சட்டம் அமல் என பாஜக கூறியதால்தான் நாடாளுமன்றத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு அதிமுக ஆதரவு அளித்தது என்றும் அன்வர் ராஜா கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com