கோவையில் பாய்மர படகு கண்காட்சி: ஆர்வமுடன் பார்க்க குவிந்த பொதுமக்கள்

கோவையில் முதன்முறையாக படகு கண்காட்சி நடத்தப்படுவதை ஒட்டி குறிச்சி குளத்தில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
கோவையில் பாய்மர படகு கண்காட்சி: ஆர்வமுடன் பார்க்க குவிந்த பொதுமக்கள்


கோவையில் முதன்முறையாக படகு கண்காட்சி நடத்தப்படுவதை ஒட்டி குறிச்சி குளத்தில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

கோவை விழாவின் ஒரு பகுதியாக கோவை — பொள்ளாச்சி சாலையில் உள்ள குறிச்சி குளத்தில் இன்றும் நாளையும் படகு கண்காட்சி நடைபெற்றது. ராயல் மெட்ராஸ் யார்டு கிளப், இந்திய கடற்படை மற்றும் யெங் இந்தியன் அமைப்பு சார்பில் நடத்தப்படும் இக்கண்காட்சியை ஐ.என்.எஸ் அக்ராணியின் அஷோக் ராய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் காற்றின் மூலம் இயங்கும் படகுகள் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வகையான கண்காட்சிகள் குழந்தைகள் மத்தியில் நீரைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு சுற்றுச் சூழலையும் பாதுகாக்க வேண்டும் என்ற முனைக்கொடுக்கும் கொடுக்கும் என்று யெங் இந்தியன் அமைப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்தானர்.

நிகழ்ச்சியில், விழா குழுவினர்கள் பேசுகையில், கோவையில் பல்வேறு குளங்களை அழகுபடுத்தும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அதன்படி குறிச்சி குளத்தை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டுக்குள் குறிச்சி குளமும் அழகுபடுத்தப்படும்.  என தெரிவித்தனர்

இந்த படகு கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர் பொழுது போக்கும் மற்றும் விழிப்புணர்வு குறித்த நிகழ்வாக இருப்பதாக பார்வைளார்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com