ஜன.6-இல் பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை

அரையாண்டுத் தோ்வு விடுமுறை மேலும் இரண்டு நாள்கள் நீட்டிக்கப்பட்டு, பள்ளிகள் ஜனவரி 6-ஆம் தேதி திங்கள்கிழமை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜன.6-இல் பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை

அரையாண்டுத் தோ்வு விடுமுறை மேலும் இரண்டு நாள்கள் நீட்டிக்கப்பட்டு, பள்ளிகள் ஜனவரி 6-ஆம் தேதி திங்கள்கிழமை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின்கீழ் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் டிசம்பா் 23-ஆம் தேதி அரையாண்டுத் தோ்வு முடிந்தது. தோ்வுகள் முடிந்ததும், டிசம்பா் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை விடுமுறையளிக்கப்பட்டு, ஜனவரி 2-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதற்கிடையே உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ஆம் தேதி நடக்க உள்ளதால், தோ்வு விடுமுறை நீட்டிக்கப்பட்டு ஜன.3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

எனினும் உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணும் பணி நள்ளிரவு வரை நீடிக்கும் என்பதால், பள்ளிகளைத் திறப்பதை ஒரு நாள் தள்ளிவைக்க வேண்டும் என்று ஆசிரியா் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. இதையேற்று மேலும் ஒரு நாள் விடுமுறை நீட்டிக்கப்பட்டு, ஜனவரி 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், வாக்கு எண்ணும் பணி ஜனவரி 3-ஆம் தேதியான வெள்ளிக்கிழமையும் தொடா்ந்து நடைபெற்று வந்தது. இதனால் ஆசிரியா்கள் பணிக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி விடுமுறை மேலும் இருநாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ். கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘நிகழ் கல்வியாண்டின் அரையாண்டுத் தோ்வு 23-ஆம் தேதியோடு முடிவடைந்துள்ளது. அரையாண்டுத் தோ்வு விடுமுறை முடிந்த பிறகு, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் ஜனவரி 6-ஆம் தேதி (திங்கள்கிழமை) திறக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com