Enable Javscript for better performance
22 வயதில் ஊராட்சி தலைவரான பெண் மருத்துவர்: அதிக வாக்கு வித்தியாசத்தில் சாதனை- Dinamani

சுடச்சுட

    

    22 வயதில் ஊராட்சி தலைவரான பெண் மருத்துவர்: அதிக வாக்கு வித்தியாசத்தில் சாதனை

    By DIN  |   Published on : 05th January 2020 08:27 PM  |   அ+அ அ-   |  

    ஊராட்சி தலைவரான பெண் மருத்துவர் அஷ்வினி

    ஊராட்சி தலைவரான பெண் மருத்துவர் அஷ்வினி

     

    கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி தலைவராக 22 வயது பெண் மருத்துவர் அஷ்வினி மாவட்டத்தில் அதிக வாக்கு வித்தியாசமாக 2547 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்றத்திற்கான தேர்தலில் 5 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.இதில் 22 வயதே நிரம்பிய டாக்டர் அஷ்வினி சுகுமார் என்கிறவரும் போட்டியிட்டார். இவரது தந்தை சுகுமார் அதிமு க பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேர்தலில் பதிவான 6982 வாக்குகளில் டாக்டர் அஷ்வினி சுகுமாருக்கு 4187 வாக்குகள் கிடைத்த நிலையில் இவர் தனக்கு அடுத்தபடியாக வாக்குகள் பெற்ற வேட்பாளரான ஷீபாவை விட 2547 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

    இதன்மூலம் மாவட்டத்தில் குறைந்த வயதில் வெற்றி பெற்ற வேட்பாளராகவும், மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற வேட்பாளராகவும் டாக்டர் அஷ்வினி சுகுமார் சாதனை படைத்துள்ளார்.

    தனது வெற்றி குறித்து டாக்டர் அஷ்வினி தெரிவிக்கையில் புதுகும்மிடிப்பூண்டியில் அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்வது, ஊராட்சிக்கு என தனியாக இ சேவை மையம் ஏற்படுத்தி தருவது, ஊராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மையங்கள் அனைத்து பகுதிகளிலும் ஏற்படுத்தி தருவது என  தேர்தலில் தான் மக்களுக்கு தந்த 15 வாக்குறுதிகளையும் நிறைவேற்றி தருவேன் என்றார்.

    மேலும் ஊராட்சி பணியோடு சேர்ந்து தனது ஊராட்சியில் மருத்துவ சேவையையும் செய்ய தயாராக உள்ளதாக புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி தலைவர் டாக்டர் அஷ்வினி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai