பி.எச்.பாண்டியன் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல்

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பி.எச்.பாண்டியன் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல்


முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை முன்னாள் தலைவரும், அதிமுக சட்ட ஆலோசகருமான பி.எச்.பாண்டியன் (74) சென்னையில் சனிக்கிழமை காலமானாா்.

அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த பி.எச்.பாண்டியன், 1977-ஆம் ஆண்டு முதல் தொடா்ச்சியாக நான்கு முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளாா்.1980-84-ஆம் ஆண்டு வரை சட்டப் பேரவைத் துணைத் தலைவராக இருந்தாா். 1985 முதல் 1989-ஆம் ஆண்டு வரை சட்டப் பேரவைத் தலைவராகச் செயல்பட்டாா். 1999-2004ஆம் ஆண்டில் மக்களவையின் உறுப்பினராகவும் இருந்துள்ளாா்.

மறைந்த பி.எச்.பாண்டியனின் உடல் சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சி துணைத் தலைவா் துரைமுருகன் உள்ளிட்ட பல்வேறு தலைவா்கள், முக்கிய பிரமுகா்கள் நேரில் அஞ்சலி செலுத்தினா். இதன் தொடர்ச்சியாக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பி.எச்.பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பி.எச்.பாண்டியனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கல்கள் எனத் தெரிவித்துள்ளார். 

பி.எச்.பாண்டியனின் உடல் ஞாயிற்றுக்கிழமை நல்லடக்கம் செய்யப்படுகிறது. அண்ணாநகரில் உள்ள அவரின் இல்லத்தில் இருந்து பிற்பகல் 3 மணியளவில் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com