சென்னையில் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மார்பளவு சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் திறந்து வைத்தார். 
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மார்பளவு சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் திறந்து வைத்தார். 

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் சிலையை சென்கருணாநிதி தெற்கு மாவட்ட திமுக அலுவலகம் அருகே சைதாப்பேட்டை பஜார் தெருவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும், மாணவர்களுக்கான இலவச கணினி பயிற்சி மையத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இதில் திமுக பிரதிநிதிகள், மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர். 

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ' கருணாநிதியின் உழைப்பு அவர் ஆற்றிய பணிகளை எடுத்து சொல்ல அவரது சிலைகளை திறந்து வைக்கிறோம். இன்று திமுகவை வழிநடத்துவது கலைஞர்தான். 

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. திமுக வெற்றியால் வரலாறு மாறியுள்ளது. ஆட்சியில் இருப்பவர்கள்தான் உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை பெறுவார்கள். அந்த வரலாறு இன்று மாறியுள்ளது. அதுபோன்று 2021ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்' என்று பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com