பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல:  அமைச்சர் ஜெயகுமார்

பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். 
பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல:  அமைச்சர் ஜெயகுமார்


சென்னை: பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். 

சென்னையில் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உள்ளாட்சித் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் அதிமுக வேட்பாளர்கள் பதவியேற்க தடைக்கோரி திமுக வழக்கு போட்டுள்ளது. 

திமுக தலைவர் ஸ்டாலின் என்னை முந்திரிக்கொட்டை என்கிறார். முந்திரிக்கொட்டை உடலுக்கு நல்லது. 

ஸ்டாலின், தான் படித்த பள்ளிக்கு அடுத்தமுறை சென்றாலும் திமுக தலைவராகவே தான் செல்வார் என்று கூறினார். 

மேலும், கூட்டணி ஆதரவு இல்லையென்றாலும் பல இடங்களில் வெற்றி பெற்றிருப்போம் என பொன்.ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com