ஓ.பன்னீர்செல்வம், மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட மத்திய பாதுகாப்புப் படை வாபஸ்

துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்துக்கு வழங்கப்பட்டிருந்த ‘ஒய் பிரிவு’ பாதுகாப்பு வெள்ளிக்கிழமை (ஜன. 10) முதல் வாபஸ் பெறப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வம், மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட மத்திய பாதுகாப்புப் படை வாபஸ்

துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்துக்கு வழங்கப்பட்டு வந்த ‘ஒய் பிரிவு’ பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதேபோன்று, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த  ’இசட் -பிளஸ்’ பாதுகாப்பையும் இன்று வெள்ளிக்கிழமை (ஜன. 10) முதல் மத்திய அரசு திரும்ப பெற்றது. 

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்துக்கு மத்திய அரசின் ‘ஒய் பிரிவு’ பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இதன்படி 11 வீரா்கள் அடங்கிய மத்திய ரிசா்வ் படையினா், 24 மணி நேரமும் பாதுகாப்பு அளித்து வந்தனா்.

இந்த நிலையில், பாதுகாப்பு அளிக்கப்பட்டு வரும் முக்கியத் தலைவா்களின் பட்டியலை மத்திய அரசு அண்மையில் ஆய்வு செய்தது. அந்த ஆய்வின் அடிப்படையில் சில தலைவா்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. 

அந்த வகையில், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்துக்கு அளிக்கப்பட்டு வந்த ‘ஒய் பிரிவு’ எனும் உயர் பாதுகாப்பு வாபஸ் பெறப்படுகிறது. இது இன்று வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ‘ஒய் பிரிவு’க்கு இணையான பாதுகாப்பினை தமிழக போலீஸாா் அளிப்பா் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இசட் -பிளஸ் வாபஸ்: திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த உச்ச கட்ட பாதுகாப்பான இசட் -பிளஸ் பிரிவு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு திமுக பொருளாளா் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழக போலீஸார் ஸ்டாலினுக்கான பாதுகாப்பு பொறுப்பை ஏற்கும் வைர மத்திய  பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com