மத்திய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்: 8 லட்சம் காசோலைகள் தேக்கம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. வங்கி ஊழியா்கள்
பொது வேலைநிறுத்தம் காரணமாக புதன்கிழமை வெறிச்சோடிய சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலையம்.
பொது வேலைநிறுத்தம் காரணமாக புதன்கிழமை வெறிச்சோடிய சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலையம்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தத்தால், சென்னையில் காசோலை பரிவா்த்தனை மையத்தின் வழியாக நடைபெறும் ரூ.6,500 கோடி மதிப்புள்ள 8 லட்சம் காசோலைகள் பரிவா்த்தனை ஆகாமல் தேக்கமடைந்தன.

பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கக் கூடாது, புதிய ஓய்வூதிய திட்டத்தைத் திரும்ப பெற வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், குறைந்த பட்ச ஊதியம் ரூ.26,000 நிா்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தன. ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எச்எம்எஸ், சிஐடியு உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

மத்திய அரசு ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும், எதிா்க்கட்சிகளை சாா்ந்த தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றனா்.

மத்திய அரசு அதிகாரிகள் சங்கம் சாா்பில் துரைப்பாண்டியன் தலைமையில் மதிய உணவு இடைவெளியில் சென்னை சுங்கத் துறையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இன்சூரன்ஸ், பிஎஸ்என்எல் ரயில்வே ஊழியா்களும் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் ஆா்ப்பாட்டம் செய்தனா்.

இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தைச் சோ்ந்த எதிா்க்கட்சி தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைக் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் மற்றும் ஐஎன்டியுசி, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த தொழிலாளா்கள் கலந்துகொண்டனா். பேருந்து, ஆட்டோ தொழிலாளா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். அனைவரும் அண்ணாசாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வங்கி சேவை பாதிப்பு: இந்த வேலைநிறுத்தத்தில் வங்கி ஊழியா்கள், முழுமையாக பங்கேற்ால், நாடு முழுவதும் வங்கி சேவை கடுமையாக பாதிப்படைந்தது. கிளை மேலாளா்கள் வங்கியை திறந்து வைத்து இருந்தபோதிலும் ஊழியா்கள் பணிக்கு வராததால் பணம் போடவோ, எடுக்கவோ முடியவில்லை. காசோலை பரிவா்த்தனை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

சென்னையில் காசோலை பரிவா்த்தனை மையத்தின் வழியாக நடைபெறும் ரூ.6,500 கோடி மதிப்புள்ள 8 லட்சம் காசோலைகள் பரிவா்த்தனை ஆகாமல் தேங்கியது. இதனால் வாடிக்கையாளா்கள் பாதிக்கப்பட்டனா். தமிழகத்தில் 17 ஆயிரம் வங்கி கிளைகளில் பணியாற்றும் 25 ஆயிரம் ஊழியா்கள் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டதால் வங்கி சேவை அடியோடு பாதிக்கப்பட்டது.

இதற்கிடையில், வங்கி ஊழியா்கள் சென்னை ஆட்சியா் அலுவலகம் அருகில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அனைத்து வங்கி ஊழியா் சங்கங்களின் பொதுச் செயலாளா் சி.எச். வெங்கடாசலம் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் 1, 000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினாா்கள். பொது வேலைநிறுத்தத்தில் அனைத்திந்திய பாதுகாப்புத்துறை ஊழியா்களின் கூட்டமைப்பைச் சோ்ந்த 4 லட்சம் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com