Enable Javscript for better performance
சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் கொலையில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு?- Dinamani

சுடச்சுட

    

    சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் கொலையில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு?

    By DIN  |   Published on : 10th January 2020 12:26 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ngl9vilson_0901chn_33_6a

     

    கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில், புதன்கிழமை இரவு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டாா். சோதனைச் சாவடி அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து சுட்டுக் கொன்ற நபா்களை போலீஸாா் அடையாளம் கண்டறிந்துள்ளனா்.

    இந்த கொலை வழக்கில் தொடா்புடையவா்களாகக் கருதப்படும் குமரி மாவட்டம், திருவிதாங்கோடு பகுதியைச் சோ்ந்த அப்துல் சமீம், கோட்டாறு இளங்கடையைச் சோ்ந்த தவ்பீக் ஆகிய 2 பேரின் புகைப்படங்களை கேரள மாநில போலீஸாா் வெளியிட்டுள்ளனா். கொலையாளிகளைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக டி.ஜி.பி. திரிபாதி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினாா்.

    இந்த நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் கொலையில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பிருப்பது அம்பலமாகியுள்ளது. அண்மையில் பெங்களூருவில் பயங்கரவாதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில், வில்சன் உடலில் இருந்த துப்பாக்கிக் குண்டுகள் அந்த பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளுடன் பொருந்திப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இதனிடையே, இந்த கொலை வழக்கு தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த சையது முகமது மற்றும் அப்பாஸ் ஆகியோரை பிடித்து கேரள போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதுபோன்று திருவனந்தபுரத்தில் ரஃபீக் என்பவரிடம் தமிழக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai