Enable Javscript for better performance
மதுரையில் ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக நடத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக நடத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

    By DIN  |   Published on : 10th January 2020 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jalikattu

    கோப்புப் படம்

    மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

    அவனியாபுரம், அலங்காநல்லூா், பாலமேடு உள்ளிட்டப் பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளா்கள் மற்றும் மாடுபிடி வீரா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக குழு ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சோ்ந்த திருப்பதி மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக நடத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.

    அதற்கு மனுதாரா் தரப்பில், கடந்த ஆண்டு ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையின் கீழ் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்றது. அதேபோல நிகழாண்டில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டும் நடத்தப்பட வேண்டும் எனக் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வெள்ளிக்கிழமைக்கு (ஜன.10) ஒத்திவைத்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai