முதியவர்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக உள்ளதா தமிழகம்? 

நாட்டில் உள்ள மாநிலங்களில் முதியவர்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
முதியவர்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக உள்ளதா தமிழகம்? 


சென்னை: நாட்டில் உள்ள மாநிலங்களில் முதியவர்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில், தமிழகத்தில் 2018ம் ஆண்டு மட்டும் 152 முதியவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் முதியவர்கள் கொலை செய்யப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதல் இடம் வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரம் (135 கொலைகள்), 3வது இடத்தில் உத்தரப்பிரதேசம் (127 கொலைகள்) நிகழ்ந்துள்ளன.

அதே சமயம், இதர மாநிலங்களை விட தமிழகத்தில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது. ஒட்டுமொத்தமாக மூத்தக் குடிமக்களுக்கு எதிராக 2018ம் ஆண்டில் 3,162 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த புள்ளி விவரம், ஒரு எச்சரிக்கை மணியாகவே உள்ளது.

அது மட்டுமல்ல, தமிழகத்தில் மூத்த குடிமக்கள் மீதான கொலை முயற்சி வழக்குகளும் அதிகமாகவே உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com