சென்னையில் ஆபரணத் தங்கம் சவரன் ரூ.30,344-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமையான இன்று சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரன் ரூ.30,344-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமையான இன்று சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.  அதன்படி கடந்த நான்கு நாட்களாக, புதிய உச்சத்தை கண்டுவந்த நிலையில், தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. 

அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.12 குறைந்து, ரூ.3,793க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.96 குறைந்து, ரூ.30,344க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதேசமயம் வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் ரூ.30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.50.10க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.50,100 விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 3,793

1 சவரன் தங்கம் ..................... 30,344

1 கிராம் வெள்ளி .................. 50.10

1 கிலோ வெள்ளி ................. 50,100

வியாழக்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம் ..................... 3,805

1 சவரன் தங்கம் ..................... 30,440

1 கிராம் வெள்ளி .................. 50.40

1 கிலோ வெள்ளி .................. 50,400
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com